@CollectorCbe
District Collector, Coimbatore
3 years
Received Hon'ble Governor of Tamil Nadu at Coimbatore Airport today (15.10.21)
Tweet media one
25
18
254

Replies

@Vignesh45370656
Vignesh prabu
3 years
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, காரமடை ஒன்றியம் ,முடுதுறை கிராமத்தில் இயங்கி கொண்டிருக்கும் கல்குவாரிகள் மற்றும் ஜல்லி உடைக்கும் இயந்திரம் மூலம் மற்றும் எம்-சாண்ட் பி-சன்ட் ஆகியவை உற்பத்தி செய்து கொண்டுள்ள 1.ஸ்ரீ சக்தி விநாயகர் ப்ளூமெட்டல்ஸ்(S F NO-471/1,472/1A),
Tweet media one
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe 2.ஸ்ரீ சண்முகா ப்ளூமெட்டல்ஸ்(S F NO-478/1,479/1B2), 3.ஸ்ரீதேவி ப்ளூமெட்டல்ஸ்(S F NO-410/1A,410/1B) , 4.ஸ்ரீ ஹர்ஷவர்தன் ப்ளூமெட்டல்ஸ்(S F NO-409/1A,462/1B), 5.பென்னி ப்ளூமெட்டல்ஸ்,6. ஸ்ரீ ஹரிஹரன் ப்ளூமெட்டல்ஸ் மற்றும் 7.(S F NO-409/1B2,409/3), காளிச்சாமி என்பவர் உரிமம் பெற்ற
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe கல்குவாரி சிவகுமார் உரிமம் பெற்ற கல்குவாரி மற்றும் கல் குவாரிகளில் கல் உடைக்க பயன்படுத்தும் தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்துள்ள பெருமாள் என்பவர் அமைத்துள்ளார், அதுமட்டுமின்றி மீண்டும் புதிதாக கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க உரிமம் கேட்டு (S F NO- 466 /1B,466/1A)
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe ஸ்ரீ வெங்கடேஸ்வரா ப்ளூ மெட்டல்ஸ் கல்லுடைக்கும் உரிமை கோரியுள்ள இந்த கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குவதால் முடுதுறை ஊராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு இப்பகுதியில் காற்று மாசுபடுவதை தடுக்க கோரியும் ஜீவனம் செய்து வரும் விவசாய நிலங்களையும்
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe கால்நடைகளின் விவசாயிகளையும் காப்பாற்ற கல்குவாரி மற்றும் கிரஷர்களை கல்லுடைக்கும் கல் குவாரிகளை நிரந்தரமாக நிறுத்தி விவசாயிகளை காக்க நடவடிக்கை எடுத்து உதவ கோரும் கூறுதல் தொடர்பாக,
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe ஐயா, வணக்கம் மேற்கண்ட முடுதுறை ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன மேற்கண்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேலே குறிப்பிட்டுள்ள 8 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன கல்குவாரிகள் ஏற்படும் புகையினால் பொதுமக்கள் ஆஸ்துமா நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe பெரிதும் பாதிப்படைகிறது அதுமட்டுமின்றி கல்குவாரியில் வெடி வைக்கும் போது அருகில் உள்ள வீடுகளில் மீது கல் விழுவதால் வீடுகள் உடைந்து விரிசல் ஏற்படுகிறது மற்றும் வீடுகளுக்கு அருகாமையில் கல்குவாரிகள் இயக்கப்பட்டு வருகிறது மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால் மழைப்பொழிவு என்று
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe விவசாயம் பெரிதும் பாதிப்படைந்து மானாவாரி பயிரான நிலக்கடலை மழையின்றி காய்ந்து கிடக்கின்றன. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கனரக வாகனங்கள் இரவு பகல் நேரங்களில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் கல்குவாரி லாரிகள் செல்லும் பாதையில் அச்சத்துடன் நடமாட வேண்டிய உள்ளது.
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளால் நிறைய விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்தக் கிரஷர்கள் மற்றும் கல்குவாரிகளில் கல் உடைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு எங்கள் விவசாயம் நீர்ப்பாசனம் விளைநிலங்கள் அனைத்தும் வானம்
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe நோக்கிய பூமியாக மாறி வருகிறது. இந்த கல் குவாரிகளில் போர்வெல் இயந்திரம் மூலம் சுமார் 4 அகலம் 30 -40 அடி வரையில் ஆழத்தில் வெடிமருந்துகள் நிரப்பி சுமார் 200க்கும் மேற்பட்ட ஒன்றாக வெடிக்கும் வெடிகளால் நில அதிர்வுகளும் வீட்டின் சுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு விவசாய பூமியில்
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe விவசாயிகள் அமைத்துள்ள ஆழ்துளை கிணற்றில் மின் நீருறிஞ்சு இயந்திரங்கள் அடிக்கடி வெடி வைப்பதால் பழுதடைந்து விவசாயிகள் பாதிக்கப்டுகிறார்கள். மேலும் இந்த கற்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் பஞ்சாயத்து சாலைகளில் அதிக பாரம் சுமார் 60 டன் எடையுடன் தார் சாலைகள் செல்வதால் முடுதுறை
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe பஞ்சாயத்தில் உள்ள தார் சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது, கற்களை ஏற்றிச் சென்று இரவு பகல் பாராமல் எந்த நேரமும் வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் 3 யூனிட் அளவுகளில் கற்களை எடுத்துச் செல்லாமல் 10 முதல் 12 யூனிட் அளவு கொண்ட 60 டன் கொண்ட பெரிய வாகனங்கள் கற்களை எடுத்துச்
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe செல்வதால் தார் சாலைகள் மிகவும் சேதமடைந்து மேலும் இந்த வாகனங்கள் கிராமத்திற்குள் இரவு பகல் நேரங்களில் செல்வதால் அதில் இருந்து வரும் இரைசச்சலால் அருகில் உள்ள ஊர்பொதுமக்கள் நிம்மதியாக உறங்க முடிவதில்லை, பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேற்கண்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள்
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe அனைத்தும் ஒரே கிலோ மீட்டர் அளவுகளில் விதிமுறைப்படி இல்லாமல் குறுகிய இடைவெளியில் இயங்கி கொண்டு உள்ளது அரசின் வழிகாட்டின் முறையில் மிகவும் குறுகிய தொலைவில் இயங்கி கொண்டு உள்ளது மிக அருமையாக அமைந்து இருப்பதால் ஒன்றாகவே இயந்திரங்கள் இயக்குவதாலும் அதில் இருந்து வரும் புகையினால்
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe விவசாயப்பயிர்கள் பெரிதும் பாதிப்படைந்து விவசாயிகள் மனஉளைச்சலுக்கு தள்ளப்படும் நிலை வருகிறது விவசாய நிலங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இங்கு அமைந்துள்ள கல்குவாரிகளுக்கு மிகவும் அருகாமையில் 1௦ கிலோமீட்டர் தொலைவில் பவானிசாகர் மண் அணை உள்ளது , எனவே இங்கு
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe வெடி வைப்பதால் நில அதிர்வு ஏற்படுவதால் அணையின் சுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பயமாக உள்ளது. இங்கு அமைந்துள்ள கல்குவாரிகளை அகற்ற வேண்டும் என்றும் மனுகொடுத்தால் அந்த நபரை அரசு அதிகாரிகள் யார் என்று அடையாளம் காட்டி கல்குவாரி உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு எந்தவொரு
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த கல்குவாரி உரிமையாளர்கள் எதிராக செயல்படும் நபர்களை மனு கொடுத்தவர்களை ஆள் வைத்து மிரட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். ஆகவே இவை அனைத்தையும் தடுத்து இங்கு செயல்பட்டு வரும் முடுதுறை கிராமத்தில் இயங்கி கொண்டிருக்கும் அனைத்து கல்குவாரிகள்
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe மற்றும் அவர்களில் உரிமம் ரத்து செய்து நிரந்தரமாக கல்குவாரியை அகற்றி கிராம மக்களையும் விவசாய நிலம் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகளையும் கால்நடைகளும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். கல்குவாரி இல்லாத ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றும் ஆகவே ஊராட்சியில் செயல்படும்
0
0
0
@MoorthyNaveen4
தன்னாசி கருப்புசாமி
3 years
@CollectorCbe கல் குவாரிகளை முழுமையாக தடை செய்ய உரிய தீர்மானம் நிறைவேற்றி இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகளையும் மற்றும் பொதுமக்களையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு (த.கருப்புசாமி)
0
0
0